Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

பேச்சிப்பாறை அணை...

 Image result for பேச்சிப்பாறை அணை...

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 64கி.மீ தொலைவிலும், பத்மநாபபுரத்திலிருந்து 27கி.மீ தொலைவிலும், திற்பரப்பிலிருந்து 14கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய, உயரமான அணைதான் பேச்சிப்பாறை.

சிறப்புகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் எழில்மிகு அழகுடன் காணப்படும் பெரிய அணைதான் பேச்சிப்பாறை அணை.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கண்கவரும் அழகிய அணை. பார்த்து பரவசம் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடம்.

நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது. இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்.

இது கோதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையைச் சுற்றிலும் உயர்ந்த மரங்கள் இன்னும் இவ்வணைக்கு அழகு சேர்க்கின்றது.

அணையின் அருகிலேயே உள்ள மலைகள் கண்களுக்கு விருந்து. இவ்வணையில் படகு பயணம் செய்து ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்துடன் சென்று விடுமுறையை அனுபவிக்க ஏற்ற இடம்.


எப்படி செல்வது?

கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

விமானம் வழியாக :

தூத்துக்குடி விமான நிலையம்.

ரயில் வழியாக :

கன்னியாகுமரி ரயில் நிலையம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.

இதர சுற்றுலாத்தலங்கள் :

கன்னியாகுமரி கடற்கரை.
விவேகானந்தர் பாறை.
திருவள்ளுவர் சிலை.
பத்மநாபபுரம் அரண்மனை.
மாத்தூர் தொட்டிப்பாலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!