Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

அறிவுக்கூர்மை...!

Image result for அறிவுக்கூர்மை.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

அரசர் ராஜவர்மன், தன் மந்திரி விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மந்திரி அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை என்று கூறினார். ஆனால், அவர் கூறிய கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.

அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் அதைச் செய்து காட்டுகிறேன் என்று மந்திரி கேட்டார். மந்திரியே! நீ ஏதேனும் வீரச் செயல் செய்யப் போவதாகச் சொல்ல வேண்டும். அதற்காக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். உன்னால் முடியுமா? என்றார் அரசர்.

உடனே மந்திரியும், அரசே! மிக எளிய செயலைத்தான் சொல்லி இருக்கிறீர் என்றார். மந்திரியாரே! நீ நினைப்பது போல் இது எளிய செயல் அல்ல. வீரச் செயல் செய்வதாகச் சொல்லி, மக்களின் கூட்டத்தைக் கூட்டுவது எளிது. பிறகு அதைச் செய்யாவிட்டால், அந்தக் கூட்டம் உன்னைத் தப்பிக்க விடாது. நீ அவமானப்படத்தான் போகிறாய் என்றார்.

அரசே! இதில் எனக்கு எந்த அவமானமும் ஏற்படாது. பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டு மந்திரி அங்கிருந்து சென்றார். ஒரு நாள் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதை அரசர் பார்த்து எங்கே செல்கின்றனர்? என்று கேட்டார். அதில் ஒருவர் அரசே! எல்லோரும் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கே கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப்போகிறேன் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்க்கத்தான் எல்லோரும் சென்று கொண்டிருக்கின்றனர் என்றான்.

உடனே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க அவரும் அங்கே சென்றார். நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணப் போகிறேன். பத்து என்று சொன்னதும், கீழே குதிக்கப்போகிறேன். நான் பேச்சு தவற மாட்டேன். என் வீரச் செயலைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றார். என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்த போது மந்திரியின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின.

அவர் ஒன்பது என்று எண்ணியதும், கூட்டத்திலிருந்து ஒரு குரல், எண்ணுவதை நிறுத்தி விட்டுக் கீழே வாருங்கள் என்று கேட்டது. யார் குரல் கொடுத்தது என்று எல்லோரும் பார்த்தனர். அங்கே மந்திரியின் மகன் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்தான். உரத்த குரலில் அவன், தந்தையே! உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாரம், அம்மா ஆசையாக உங்களுக்காகச் செய்தது. கீழே இறங்கி வந்து இதைச் சாப்பிடுங்கள். பிறகு குதியுங்கள் என்றான்.

எனக்கு மிகவும் பிடித்த பணியாரத்தை என் மகன் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் அனுமதி தந்தால் அதைச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குதிக்கிறேன். நீங்கள் அனுமதி தருவீர்களா? என்று கேட்டான். பணியாரத்தைச் சாப்பிட்டுவிட்டுக் கீழே குதி என்று அவர்களில் ஒருவர் குரல் கொடுத்தார். உடனே மந்திரியும் கீழே இறங்கி வந்து, பணியாரத்தை சுவைத்து சாப்பிட்டார். பிறகு அப்படியே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த சிலர், உயிர் தப்புவதற்காக மயக்கம் வந்தது போல நடிக்கிறான் என்றனர்.

அரண்மனை மருத்துவர் அங்கே வந்து மந்திரியை சோதித்து பார்த்து, உண்மையிலேயே மயக்கமாகி விட்டார். உடனே மந்திரியை, அவர் வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர். ஐயோ! இப்படியாகி விட்டதே! என்று பேசிக் கொண்டே கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மறுநாள் மந்திரி அரசரை சந்தித்து, நீங்கள் சொன்னது போல் வீரச் செயல் செய்வதாக பெரிய கூட்டத்தைக் கூட்டினேன். அவர்கள் எதிரிலேயே அந்தச் செயலைச் செய்யாமல் வந்து விட்டேன். எப்படி என் திறமை? என்று கேட்டார்.

அப்போது உன் மகன் பணியாரங்களுடன் வரவில்லையானால் உன் நிலை, என்னவாகி இருக்கும்? என்று கேட்டார் அரசர். அரசே! அந்தப் பணியாரங்களுக்குள் மயக்க மருந்து கலந்து எடுத்து வரச் சொன்னதே நான்தான். எல்லாம் என் திட்டப்படி நடந்தது என்று மந்திரி கூறினார். அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை உன் மூலம் புரிந்து கொண்டேன் என்று மந்திரியை அரசர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக