Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்மா பணம் கொடுக்க மறுத்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

அம்மா பணம் கொடுக்க மறுத்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கிருஷ்ண ஜெயந்தியன்று தாய் பணம் கொடுக்க மறுத்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!
டெல்லியை அடுத்துள்ள அமன் விஹார் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்; சிறுவன் தன் தாயிடம் ஜன்மாஷ்டமி பண்டிகையையொட்டி செலவுக்கு கொஞ்சம் பணம் கேட்டிருந்தான்.
இந்நிலையில், அவரது தாயார் அவருக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டார். அதுமட்டும் இன்றி அவரது தாயார் அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் வருத்தப்பட்டார். இதையடுத்து, தாயார் அருகிலுள்ள ஒரு பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து,  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!