Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 செப்டம்பர், 2019

12 வருடங்களாக போலீசுக்கு தண்ணீர் காட்டிய வண்டார்குழலி..! – அதிரடியாக சுற்றி வளைத்த போலீஸ்..!

Image result for arrest
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சேலம் பழனியப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48). இவருடைய மனைவி வண்டார்குழலி (45). இவர்கள் கடந்த 2002-ம் ஆண்டு ஈரோடு நேரு வீதியில் கம்ப்யூட்டர் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை திறந்தனர்.
இவர்களுடன் சேலத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன், ராஜ்குமார், வீரக்குமார், அரசேந்திரன் ஆகியோரும் பங்குதாரராக இருந்தனர். அவர்கள், பல்வேறு பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித்தருவதாக விளம்பரங்கள் செய்தனர். அதை நம்பி பலரும் பணம் கொடுத்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் மற்றும் வண்டார்குழலி உள்ளிட்ட 6 பேரும், ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக சம்பத்நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வண்டார் குழலியும், பிரபாகரனும் மற்ற 4 பேரும் இணைந்து ஏராளமானவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு இந்த வழக்கு ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் 350 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
பிரபாகரன் மற்றும் வண்டார்குழலி உள்ளிட்ட 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து ஈரோடு 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் ஜாமீனில் சென்ற பிரபாகரனும், வண்டார்குழலியும் தலைமறைவானார்கள்.
மற்ற 4 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகி வந்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட சவுந்தரபாண்டியனுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. தலைமறைவான பிரபாகரன், வண்டார்குழலி வழக்கு தனியாகவும், ராஜ்குமார், வீரக்குமார், அரசேந்திரன் வழக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக பிரபாகரனும், வண்டார்குழலியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்கள் 2 பேருக்கும் 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தார்.
அதன்பேரில் கோவை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை அமைத்து சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடி வந்தனர். இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்ட வண்டார்குழலி கோவையில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 15 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அதைத்தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வண்டார்குழலி தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து ஈரோடு கொண்டு வரப்பட்டார். அவரை ஈரோடு 3-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சரண்யா முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக