இந்த
செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில்
இருந்துவந்த குருபகவான் இதற்கு பிறகு லாப ஸ்தானம் பதினொன்றாம் இடத்தில் இருந்து
பலவிதமான நன்மைகளை புரிய இருக்கின்றார். எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும்.
மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்தி லாபகரமான வாய்ப்புகளை பெறுவீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில்
இருந்து தைரிய பஞ்சம மற்றும் சப்தம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில்
புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
வீர, தீர சாகசங்கள் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
திருமண தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் இடையே இருந்துவந்த
மனக்கசப்புகள் நீங்கும். சேமிப்புகள் உயரும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான
தகவல்கள் அனுகூலமாக இருக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு
:
பணியில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக
பணியாளர்களின் நட்புறவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் ஆதாயம்
பெறுவீர்கள். பயிற்சியுடன் கூடிய பணி உயர்வு கிடைக்கும். அலைச்சல் மிகுதியால் உடல்
சோர்வு உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த உதாரணமாகவும், வழிகாட்டியாகவும்
உங்களின் செயல்பாடுகள் இருக்கும்.
பெண்களுக்கு
:
விரும்பிய வண்ணம் திருமணம் கைகூடும். புத்திர
பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு மேலோங்கும். தந்தைவழி
சொத்துகள் வந்து சேரும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், அரவணைப்பும்
அதிகரிக்கும். மறுமணம் எதிர்பார்ப்பவர்களுக்கு விரைவில் திருமணம் அமையும்.
உயரதிகாரிகளின் அறிமுகம் மற்றும் நட்பு முன்னேற்றமான சூழலை உருவாக்கும்.
தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு
:
அடிப்படைக்கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும்
மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில்
கலந்துகொண்டு பரிசுகளை பெறுவதற்கான சூழல்கள் உருவாகும். பட்டப்படிப்பிற்கு அரசு
தொடர்பான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும்
மாணவர்களுக்கு படிப்பிற்கேற்ற வேலை அமையும். அரசு தொடர்பான தேர்வுகளில்
எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
அரசியல்வாதிகளுக்கு
:
மேடைகளில் உங்களின் பேச்சாற்றல் வெளிப்பட்டு
முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள். சுற்றுவட்டாரத்தில் நண்பர்களின்
ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வாரிசுகள் வகையில் பெருமைக்குரிய சூழல் உருவாகும்.
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பத்திரிக்கைத்துறை மூலம் அனுகூலமான சூழல்
உண்டாகும். ஆன்மீக சார்ந்த பெரியோர்களின் வழிகாட்டலும், ஆலோசனையும் பெரிதும்
உதவிக்கரமாக இருக்கும். சமயோசிதமான செயல்பாட்டினால் பிரபலமாகப் பேசப்படுவீர்கள்.
கலைஞர்களுக்கு
:
கலை சார்ந்த மெய்யறிவு சிறப்பாக இருக்கும்.
இணையதள செயல்பாட்டினால் புதிய செயற்கரிய செயல்களை செய்து முடிப்பீர்கள்.
புதுவிதமான பயணம் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுவீர்கள். மனோதைரியம் மற்றும்
பொறுமையும் வெளிப்படும் வகையில் செயல்பாடுகள் அமையும். புகைப்பட கலைஞர்கள்
தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் சரியான காலமாக இருக்கும். மற்றவர்களின் ஒத்துழைப்பால்
பல பெரிய செயல்களையும் எளிதாக முடிக்கப் போகிறீர்கள்.
விவசாயிகளுக்கு
:
மஞ்சள் பயிர்களின் விளைச்சல் நன்றாக
இருக்கும். சொத்துக்களில் இருந்துவந்த சங்கடங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.
மலர்த்தோட்டம் வைத்து விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். கீரை வகை
விளைச்சல் சிறப்பாக இருக்கும். வாசனை திரவியம் மற்றும் வாசனை பொருட்கள் மூலம்
முன்னேற்றம் காண்பீர்கள். நார்சத்து மிகுந்த காய்கறிகள் பயிரிடுவதன் மூலம்
விளைச்சல் மேம்படும்.
வியாபாரிகளுக்கு
:
தானியம் சம்பந்தமான வியாபாரிகளுக்கு
முன்னேற்றமான காலம் இது. மருந்துத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான முன்னேற்றம்
அடைவீர்கள். தங்களது தொழிலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும்
சிறப்பாக இருக்கும். தொழில் சார்ந்த புதிய நுட்பங்களை செயல்படுத்துவீர்கள். இணையம்
சார்ந்த வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரம்
தொடர்பாக புதிய நபர்களின் ஒத்துழைப்பு அபிவிருத்திக்கான சூழலை உருவாக்கும்.
வழிபாடு
:
தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர சுவாமியை
வழிபட ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக