Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

டிக் டாக்கில் அறிமுகமாகி வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்கள்.! 50 சவரன் அபேஸ்.! மனைவியை தேடும் கணவன்..


 

 

 

 

 

 

 

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சிவகங்கை அருகே டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான தோழி ஒருவருடன் சேர்ந்து திருமணமான பெண் 50 சவரன் நகையுடன் வீட்டிலிருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டிக் டாக் என்னும் வார்த்தை இந்தியாவில் இருக்கும் பலபேரின் இதய துடிப்பாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் டிக் டாக் செயலியை ஏற்ற வேண்டும் என்ற மனநிலை பெரும்பாலான பயனர்களுக்கு வந்துவிட்டதென்பதே நிதர்சனம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்குத் திருமணமாகி இவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் தந்து மனைவி டிக் டாக்கில் அடிமையாகி உள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கண்டித்த கனவர், வினிதாவை அவரது தாயார் வீட்டில் தங்க வைத்துள்ளார்.


 தனது அம்மாவின் வீட்டிற்குச் சென்ற பின்பும் டிக் டாக் மூலம் அறிமுகமான தோழி அபியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார் வினிதா. இந்நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தது மட்டுமில்லாமல் கணவன் மனைவி போல் டிக் டாக்கில் டூயட் செய்து வந்துள்ளனர்.

இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானதால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த வினிதா 50 சவரன் நகைகளை எடுத் துக் கொண்டு தோழி அபியுடன் தலைமறைவாகியுள்ளார். சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த வினிதாவின் தாயார் புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையுடன் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். திருமணமான கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் டிக் டாக் தோழியுடன் வினிதா ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக