இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கர்நாடக
மாநிலம் மங்களூருவில் கடலில் நிறுத்தப்பட்ட சரக்குக் கப்பலில் வெள்ளம் புகுந்ததால்,
அதில் சிக்கிய 13 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
மாயமான 7 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரிதேவி பிரேம் என்ற சரக்குக் கப்பலானது மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது. டிரெட்ஜர் எனப்படும் தூர்வாரும் உபகரணங்களையும் கொண்ட அந்தக் கப்பலில் 20 ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் கடல் கொந்தளித்ததால் அந்தக் கப்பலில் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து உடனடியாக கடலோர காவல் படைக்கு அவசர உதவி அழைப்பு விடுக்கப்பட்டது. இதை அடுத்து அமர்தியா கப்பலுடன் கடலோர காவல் படையினர் அங்கு விரைந்தனர்.
மோசமான வானிலை நிலவிய போதும் அவர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு, கப்பலில் சிக்கித் தவித்த 13 பேரை பாதுகாப்பாக மீட்டனர். அதேவேளையில் டிரெட்ஜர் உபகரணத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 ஊழியர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக