இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகளுக்கு நம்பிக்கையும்,
நட்புணர்வு தரும் விளையாட்டுகள் கிராமங்களில் அதிகளவில் இருக்கின்றன. விளையாட்டின்
நோக்கம் என்னவென்றால் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் பண்புகள் மூன்றையும்
ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும்.
கிராமப்புறங்களில் விளையாடும்
விளையாட்டை முற்றிலும் நாம் மறந்துவிட்டோம் என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்று தான்
கழங்கு விளையாட்டு.
எத்தனை பேர் விளையாடலாம்?
பல பேர்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு
முன்பு விளையாடும் நபர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் வட்ட வடிவில் இருக்கும்
கூழாங்கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 7 கூழாங்கற்களை மட்டும் மேலே
தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றை எல்லாம் சேர்த்து அள்ள வேண்டும்.
பிறகு ஒன்றான், இரண்டான், மூன்றாம் என
ஆட்டங்களை ஆட வேண்டும். இவ்வாறு ஆடும்போது கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கடைசியாக எல்லா ஆட்டத்தையும் சரியாக
ஆடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு ஆட்டத்தை ஆடும்போது ஒவ்வொரு
பாட்டு இருக்கிறது.
ஒன்றான் : அலசல் அலசல் பாட்டிமா..
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்..
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்..
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்..
அம்மியிடுக்குல படுத்திட்டேன்..
படுத்த பாயில சுருட்டிட்டேன்...
ரெண்டான் : ஈரெண்டு எடுக்கவும்..
இளந்தம் பழுக்கவும்..
பழுத்து தின்னவும்..
மூன்றான் : முக்குட்டு சிக்குட்டு..
மூன்றாம் படிக்கட்டு...
நான்காம் : நாக்கொத்தி செங்கொத்தி...
நாகம் பழங்கொத்தி..
அஞ்சான்: ஐப்பால் அரங்கு..
பம்பாய் சிலுக்கு...
ஆறாம் : ஆக்கூர் முறுக்கு...
அள்ளிப்போட்டு நொறுக்கு...
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற...
எட்டாம் நம்பர் சேல.....
இவ்வாறு ஒவ்வொரு ஆட்டம்
விளையாடும்போதும் சொல்லிக் கொண்டு ஆட வேண்டும்.
பலன்கள் :
விரல்கள் வலுப்பெறும்.
தன்னம்பிக்கை மேம்படும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன்
மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக