இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஃபேஸ்புக்கில் காதலித்த வாலிபரை நேரில் பார்த்த பிறகு பிடிக்கவில்லை என்று கூறிய மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
கோவையில் உள்ள பெண்கள் கல்லூரி
அருகேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் வாலிபர் ஒருவர் கல்லூரி
மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் அவரை சட்டை பண்ணாமல் செல்வதும்,
கோபத்தில் அந்த வாலிபர் அப்பெண்ணைக் கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதுமான சம்பவம்
நடந்துள்ளது.
மாணவியுடன் தகராறில் ஈடுபடுவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர். அதற்கு அந்த வாலிபர், இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை நீங்கள் யாரும் வராதீர்கள் எனக் கண்டித்ததாகத் தெரிகிறது. இத கேட்டுக் கோபமடைந்த பொதுமக்கள் வாலிபரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் கோவை போலீசிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தது. சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவியும், இவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அந்த நேரங்களில் வாலிபர் தன்னை ஆடம்பரமாகப் புகைப் படங்களை எடுத்து அனுப்பியுள்ளார். இதனால் மாணவிக்கு அவரது பந்தாவான புகைப்படங்கள் மனதில் பதிந்து கொண்டது.
இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. நீண்ட நாட்களாக தொலைபேசியில் பேசி வந்த இருவரும் சந்தித்து பேச விரும்பியுள்ளனர். அதன் காரணமாக நேற்று காலை மாணவி படிக்கும் கல்லூரி அருகே வந்திருக்கிறார் அந்த வாலிபர். ஃபேஸ்புக்கில் பார்த்த புகைபடத்துக்கும் நேரில் பார்த்ததற்கு நிறைய வித்தியாசங்கள் இருந்ததால் அதிருப்தி அடைந்த மாணவி வாலிபரைப் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் அந்த வாலிபர் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய வாலிபரை இனிமேல் மாணவிக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது எனக் கூறி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக