இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டெல்லியின் வடமேற்கு பகுதியில் கிராரி என்ற பகுதியில்
வசித்து வருபவர் அஷூ. இவருக்கு சீமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளன.
அஷூ, கம்யூட்டர்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், சீமா,
வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அஷூ சந்தேகம் அடைந்தார்.
இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக
கூறப்படுகிறது. இந்நிலையில் அஷுவும், அவரது மனைவியும் வெளியே சென்றுள்ளனர்.
அப்போதும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் கோபமடைந்த அஷு
தனது மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் சீமா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மறைத்து
வைத்திருந்த கத்தியை கொண்டு, குத்தி கொன்றுள்ளார் அஷு. பிறகு உடலை துண்டு துண்டாக
வெட்டிய அவர், அவர் முன்பு இருந்த வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் மறைத்து
வைத்துள்ளார். பின்னர் சீமாவின் தாய்க்கு போன் செய்த அஷு, உங்கள் மகளை கொன்று
விட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அஷு காவல்நிலையத்திற்கு சென்று
சரணடைந்துவிட்டார்.
பின்னர் அவரை கைது செய்த போலீசார், அந்த செப்டிக்
டேங்கிற்கு சென்று, அங்கிருந்த தலையை எடுத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் அந்தப்
பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக