இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அரிசி
கழுவிய நீரை அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம்,
கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
அரிசி
கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை
அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
அரிசி
கழுவிய நீரினை சிறிய காட்டனை பயன்படுத்தி முக்கியெடுத்து முகத்தை துடைப்பதால்,
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.
வெயிலினால்
சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும்
அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவுவதால் என்றும் இளமையாக இருக்கலாம்.
கூந்தல்
அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அரிசி கழுவிய நீரால் கூந்தலை
அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச
வேண்டும். இதனால் கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும்,
அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.
அரிசி
கழுவிய தண்ணீரை குழந்தைகளை குளிக்க பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரும நோய்கள்
வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.
அரிசியை
வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல்
முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக
நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக