இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கார் வைத்திருப்பவர்கள் தங்களது முகவரிகளை ஸ்டிக்கர் அடித்து ஒட்டினால் குற்றமாக கருதி அபராதம் வசூலிக்கப்படும் என ஜெய்ப்பூர் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இனி வாகனங்களில் இந்த மாதிரி
''ஸ்டிக்கர்'' ஒட்டினால் அபராதம்.. - போக்குவரத்து து...
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர்
போக்குவரத்துத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், கார் உரிமையாளர்கள் அவர்களது பெயர்,
செய்யும் தொழில், கட்சிப் பெயர், வசிக்கும் இடம், சாதி மற்றும் மதம் ஆகிய தனிப்பட்ட
விவரங்களை ஸ்டிக்கர் அடித்து ஒட்டக்கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ஜெய்ப்பூர் போக்குவரத்து துறையை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார். இதை குறித்து அந்த அறிக்கையில் கூறப்படுவது, கார் உரிமையாளர்கள் காரில் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதால் அது மற்ற வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்கும்.
இதனால் சாலைகளில் விபத்துகள் நேரிடுகிறது. இந்த விதிமுறைகள் மூலம் விபத்துகள் ஏற்படுவதை குறைக்கலாம். மேலும் சில வாகனங்களில் வண்டி எண்ணை மறைக்கும் அளவிற்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. இது போன்ற செயல்களையும் தடுக்க முடியும்.
சிவில் உரிமைகள் சமூகம் இதை பற்றி கருது கூறியுள்ளது. அதாவது, வாகனங்களில் ஒட்டப்படும் சாதி, மதம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்கள் சமூகத்தில் வகுப்பு வாதத்தை ஊக்குவிக்கும். ஆகையால் இந்த நடவடிக்கை மூலமாக இந்த பிரச்சனைகள் குறையும் என்கின்றனர்.
வண்டி எண்களில் ஒட்டப்படும் தேவையற்ற ஸ்டிக்கர்களுக்கு காவல் துறையினரால் அப்பகுதியில் 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். மேலும் இது போன்று புதிய விதிமுறைகளை விதிக்கும் பொழுது காவல் துறையினர் 100 முதல் 300 வரை 1988 மோட்டார் வாகன சட்டம் 177 ன் படி அபராதம் வசூலிக்கலாம் என்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக