இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெண்களிடம் நடுவிரலைக் காட்டினால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின்
சகோதரியிடம் நடுவிரலை காட்டியதுடன் உடல் ரீதியாக தாக்கியதாக அவர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த
2014-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில்அந்த நபர் மீது இந்திய தண்டனைச்
சட்டம் 509 மற்றும் 323-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும்
2015-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நீதிமன்றம் அந்த நபருக்கு எதிராக
குற்றச்சாட்டுகளை வகுத்தது. குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றங்கள்
அனைத்தையும் மறுத்ததுடன் இது சொத்து தகராறு காரணமாக கூறப்பட்டுள்ள பொய் புகார்
என்று தெரிவித்தார்.
இந்நிலையில்
இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் வசுந்தரா ஆசாத் முன்னிலையில் மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, பெண்களை அவமதிக்கும் வகையிலான தகாத
வார்த்தைகள் அல்லது செயல்கள்/ குறியீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று
தெரிவித்தார்.
மேலும் இந்த
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை
நீதிமன்றம் வழங்கும் என்றும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக