இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வெளிநாடுவாழ்
இந்தியர்கள் ஆதார் அட்டையைப் பெற விரும்பினால், 2016 ஆதார் சட்டப்படி, ஆதாருக்கு
விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக அவர் தொடர்ச்சியாக 182 நாள்கள் இந்தியாவில்
வசித்திருக்க வேண்டும். அதாவது, ஆறு மாதம் தொடர்ச்சியாக அவர் இந்தியாவில்
தங்கியிருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, ஆதார்
அட்டையைப் பெறுவது அவர்களுக்குக் கடினமான ஒன்றாக இருந்தது.
இந்த
நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டுமென்று அரசுக்கு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வந்தன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது இதைக்
குறிப்பிட்டு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆதார் அட்டையைப் பெறுவதற்காக இருக்கும்
182 நாள்கள் காத்திருப்புக்காலத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று
கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது வெளிநாடு வாழ்
இந்தியர்கள் ஆதார் அட்டையைப் பெறுவதற்கு 182 நாள்கள் தொடர்ச்சியாக இந்தியாவில்
வசிக்க வேண்டுமென்ற விதிமுறை நீக்கப்படுவதாக ஆதார் ஆணையம் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது
இதுகுறித்து
ஆதார் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
இந்தியாவிற்கு வரும்போது அல்லது முன்கூட்டி தேதி நிர்ணயித்துக்கொண்டு ஆதார்
அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருக்கும்
பாஸ்போர்ட்டை முகவரிச்சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாகப் பயன்படுத்தலாம்.
ஒருவேளை, பாஸ்போர்ட்டில் இந்திய முகவரி இல்லையென்றால், ஆதார் ஆணையம் அனுமதித்துள்ள
வேறு ஏதேனும் சான்றுகளை முகவரிக்கும் பிறந்த தேதிக்கும் காட்டலாம் என்றும் அந்தச்
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை
பெறுவது இனி மிகவும் எளிதானதாக இருக்கக்கூடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக