Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 செப்டம்பர், 2019

`வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை

Image result for `வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சென்னை காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (42). இவரின் மனைவி சரண்யா (30). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கார்த்திக் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். திடீரென கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வேலையை இழந்து கார்த்திக், அரசு வேலைக்காக வேலாயுதம் என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், மூன்று லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறி கார்த்திக்கையும் அவரின் மனைவியையும் வரவழைத்து பிரசாதத்தில் விஷம் வைத்துக் கொடுத்துள்ளார் வேலாயுதம். இதில் கார்த்திக் உயிரிழந்தார். அவரின் மனைவி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விஷம் கொடுத்த வேலாயுதத்தை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``வியாசர்பாடி முல்லைநகரைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், பேராசிரியர் கார்த்திக்கிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய அவர், வேலாயுதத்திடம் மூன்று வருடங்களுக்கு முன்பு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் வேலை பார்த்த கல்லூரி ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போது, கார்த்திக் வேலையை இழந்துள்ளார். இதனால், வேலாயுதத்திடம் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை, கார்த்திக் பலமுறை கேட்டுள்ளார். அப்போது தருகிறேன், இப்போது தருகிறேன் என்று வேலாயுதம் நாள்களைக் கடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார்த்திக் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கார்த்திக்கிடம் பேசிய வேலாயுதம் முல்லைநகருக்கு வந்துவிடு. பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி தன் மனைவி சரண்யாவுடன் பைக்கில் சென்றுள்ளார் கார்த்திக். அப்போது வேலாயுதம், சாய் பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன். பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
முதலில் பிரசாதத்தை கார்த்திக்குக்குக் கொடுத்துள்ளார் வேலாயுதம். பின்னர், பிரசாதத்தை சரண்யாவுக்குக் கொடுத்துள்ளார். சாப்பிட்ட இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். வேலாயுதம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மயங்கிக்கிடந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். அவரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய வேலாயுதத்தைத் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கண்காணித்து வருகிறோம். விரைவில் வேலாயுதத்தைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.
கார்த்திக் வேலை பார்த்த கல்லூரி ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போது, கார்த்திக் வேலையை இழந்துள்ளார். இதனால், வேலாயுதத்திடம் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை கார்த்திக் பலமுறை கேட்டுள்ளார். அப்போது தருகிறேன், இப்போது தருகிறேன் என்று வேலாயுதம் நாள்களைக் கடத்தி வந்துள்ளார்.
விசாரணை போலீஸ்
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், "என்னுடைய கணவர், அரசு வேலைக்காக வேலாயுதத்திடம் 3 லட்ச ரூபாய் கொடுத்தார். கணவருக்கு வேலை போனதால் மிகவும் கஷ்டப்பட்டோம். இதனால் அரசு வேலை வேண்டாம் என்று கொடுத்த பணத்தை வேலாயுதத்திடம் திரும்பக் கேட்டோம். ஆனால், அவர் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில்தான் வேலாயுதம் எங்களை வரவழைத்தார். பணம் கிடைத்துவிடும் என்று நம்பிச் சென்றோம். சாமி பிரசாதம் என்பதால் வாங்கிச் சாப்பிட்டோம். விஷம் கலந்து கொடுப்பான்னு நினைக்கவில்லை. என் கணவரை வேலாயுதம் கொன்றுவிட்டான்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக