Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

TNPSC Group 2 தேர்வு முறையில் மாற்றம்; 2A பாடத்திட்டம் இணைப்பு..!


Image result for TNPSC Group 2 தேர்வு முறையில் மாற்றம்; 2A பாடத்திட்டம் இணைப்பு..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





TNPSC குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் இரண்டாம் நிலை குடிமைப்பணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப்-2 முதல்நிலைத்தேர்வில், 175 பொது அறிவு வினாக்களும், 25 கணிதம் சார்ந்த வினாக்களும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் குரூப்-2 முதல்நிலை எழுத்துத்தேர்வில் மட்டுமே மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளதாகவும், குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடம் தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும், முதன்மை தேர்வில் மொழி பாடங்களுக்கான வினாக்கள் கொள்குறி வடிவில் கேட்கப்படாமல், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிப்பெயர்ப்பு (Translate) செய்யும் கேள்விகளாக கேட்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே, இனி குரூப்-2 முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. மனப்பாட முறையை ஒழித்து மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொண்டு வரும் வகையிலும், கிராமப்புற மாணவர்களும் அதிக அளவில் பயன் பெறும் நோக்கத்தோடும் இந்த புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப்-2 முதல்நிலை எழுத்துத் தேர்வின் பழைய பாடத்திட்டத்தின்படி, 300 மதிப்பெண்களுக்கான தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடங்களிலிருந்து கொள்குறி கேள்விகள் கேட்டகப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக