இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கொடுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி
நூற்பாலை போராட்டம்..!!
தென்னிந்தியாவில்
தூத்துக்குடியில் ஆங்கிலேய வணிகர்களால் உருவாக்கப்பட்ட நூற்பாலை இருந்தது.
அங்கு
தொழிலாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. 12 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்க
வேண்டும். ஏதேனும் தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
தொழிலாளர்களின்
அவலநிலையை பார்த்து வ.உ.சிதம்பரம்பிள்ளை மிகவும் வருந்தினார்.
பிறகு
அனைவரையும் ஒன்றுதிரட்டி உங்களுக்கான சரியான ஊதியத்தினை அவர்களிடம் கேளுங்கள்.
மேலும், வாரம் ஒருநாள் விடுமுறை கேளுங்கள் என்று கூறி வேலைநிறுத்த போராட்டத்தினை
நடத்த அவர்களோடு சேர்ந்து பங்களித்தார்.
தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் செய்ய வழிகாட்டினார். தன் மனைவியின் நகைகளை விற்றும், ஊர் மக்களிடம்
பணமும், பொருளும் திரட்டியும் தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவினார்.
ஆங்கிலேயர்கள்
முதலில் அவர்களின் நிலைநிறுத்த போராட்டத்தினை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
பிறகு
போராட்டம் தீவிரமடைய, நாளுக்குநாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்தது. இதன்பின்னர் தொழிலாளர்களிடம் பேசிய அந்த தொழிற்சாலை
நிறுவனம் அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியது.
அதனை
தொடர்ந்து அவர்கள் வேலை நேரத்தில் அவர்களிடம் கனிவாகவும் நடக்க துவங்கினர்.
அந்தக்காலத்தில்
தொழிற்சங்கம் இல்லாமல் இவ்வளவு பெரிய போராட்டத்தினை நடத்தி அதனை வெற்றிகரமாக
முடித்தவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை. இந்த நிகழ்வினையடுத்து ஆங்கிலேயர்களின் வெறுப்பு
இவர்மீது மீண்டும் அதிகரிக்க துவங்கியது.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
அவர்களை ஆங்கில அரசு எவ்வாறு கைது செய்தது? என்பதை பற்றி நாளைய பகுதியில்
பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக