இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒட்டப்பிடாரத்திலும்,
தூத்துக்குடியிலும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வெற்றிவாகை சூடிக்கொண்டிருந்தார்
வ.உ.சிதம்பரம் பிள்ளை.
வ.உ.சிதம்பரம்
பிள்ளை 1901ஆம் ஆண்டு மீனாட்சி அம்மாளை திருமணம் செய்துகொண்டார். இளமை முதற்கொண்டே
இவர் தேசிய உணர்வு உடையவராகவும், விடுதலை வேட்கை மிகுந்தவராகவும் விளங்கினார்.
1905ல்
வங்கப்பிரிவினை நடந்தபோது அதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.
திலகரின் புரட்சிக் கருத்துக்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளையை கவர்ந்தன. அதன்பின்
திலகரை தம் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டார். தென்னாட்டில் திலகரின் கொள்கைகளைப்
பரப்பினார்.
1900களில்,
வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்புச்
சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் என அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக
நடந்து கொண்டிருந்தது. ஆனால், இத்தகைய எதிர்ப்பு மட்டுமே போதாது, பொருளாதார
ரீதியாக ஆங்கிலேயர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம், வ.உ.சிதம்பரம் பிள்ளை
மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது.
சுதந்திர
வேட்கை தீவிரமடைந்திருந்த தருணத்தில், வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்
இந்தியாவின் செல்வங்களை கொள்ளையடித்து செல்வதை கண்டு வெகுண்டு எழுந்தார்.
தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று மக்களிடம் விடுதலை உணர்வை தூண்டினார். வெளிநாட்டு
பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமாகியபோது வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்,
சுதேசி பொருட்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தூத்துக்குடியில் தருமசங்க நெசவுச்
சாலையையும், சுதேசிப் பண்டக சாலையையும் நிறுவினார்.
இவருடைய
முயற்சிகளுக்கு கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரும், சுப்பிரமணிய சிவாவும் உறுதுணையாக
இருந்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளை சென்னைக்கு செல்லும்போது பாரதியாரை சந்திப்பதை
வழக்கமாக கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
பாரதியார் தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்.
வ.உ.சிதம்பரம்
பிள்ளையும், பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். இருவரின்
தந்தையரும் நெருங்கிய நண்பர்களே. இருவரும் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர்கள்
நாட்டின் விடுதலை பற்றியே பேசிக்கொண்டனர். எனவே, இவர்கள் இருவரின் கருத்துக்கள்
ஒன்றாக இருப்பதை தங்களுக்குள் அறிந்தனர்.
'அந்நியப்
பொருட்களை புறக்கணியுங்கள்" என அவர் எடுத்த ஆயுதம், ஆங்கிலேயர்களை ஆட்டம்
காணச் செய்தது.
வ.உ.சிதம்பரம்
பிள்ளை அவர்கள் ஆரம்பித்த கப்பல் கம்பெனியை பற்றி நாளை காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக