இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வ.உ.சிதம்பரம்பிள்ளை
அவர்கள் சொந்த கப்பல்கள் இல்லாமல் வணிபத்தை தொடர இயலாது என்பதை தெரிந்துகொண்ட பின்
சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார்.
அவருக்கு
உதவியாக தூத்துக்குடி கடல் வணிகர்கள் உதவி புரிந்தனர். எனினும் அது போதவில்லை.
இவருக்கு உதவியாக ராஜாஜி மற்றும் பாரதியாரும் பல உதவிகளை புரிந்தனர்.
ஜனாப்
ஹாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் மட்டும் சுதேசி நாவாய் சங்கத்தில் 8000
பங்குகளை வாங்கினார். அந்தப் பங்கின் மொத்த தொகை 2 லட்ச ரூபாயாகும். அதுவே, தொடக்க
மூலதனமாக இருந்தது. இந்த கப்பல் நிர்வாகத்தை கவனிப்பதற்காக வ.உ.சி. தன் வழக்கறிஞர்
தொழிலை விட வேண்டியிருந்தது.
சுதேசி
நாவாய் சங்கத்திற்கு பங்குகள் சேர்க்க வ.உ.சிதம்பரம்பிள்ளை வடஇந்தியாவுக்கு
சென்று திலகருடன் தொடர்பு கொண்டார். வடஇந்தியாவிலிருந்தும்,
தென்னிந்தியாவிலிருந்தும் பலர் இவருடைய கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தனர்.
இறுதியில்
பல போராட்டங்களை தாண்டி எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற நீராவி
இயந்திரம் பொருத்தப்பட்ட இரு கப்பல்களை வாங்கினார்.
எஸ்.எஸ்.காலியோ
என்ற கப்பல் இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடையும் வகையில் கப்பலில் 42
முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு அறைகள் மற்றும் 1300 சாதாரண
பெட்டிகள் போன்றவற்றை கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச்
செல்லும் வகையில் அமைந்திருந்தது.
இந்திய
செய்திகள் அனைத்தும் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களை பாராட்டின.
சுதேசிக்
கப்பல் கம்பெனியில் 1907-ல் கடல் வாணிபம் தொடங்கியது. இந்திய வணிகர்கள்
இந்நிறுவனத்தின் கப்பல்களிலேயே தம் பொருட்களை அனுப்பினர். இதனால் 'கப்பலோட்டிய
தமிழன்" என்று மக்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளையை அழைத்தனர்.
கப்பல்
நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் அனைவரும் தங்களது வியாபார சரக்குகளை சுதேசி
நிறுவனம் இயக்கிய கப்பலில் கொண்டுவர ஆரம்பித்தனர். இதனால் கப்பல் நிறுவனம் வளர
ஆரம்பித்தது. கப்பல்களும் அதிகரிக்க துவங்கியது.
சுதேசி
கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை... ஏற்று கொள்ள முடியாத ஆங்கிலேயரின் சதித்திட்டம்
வெற்றி பெற்றதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக