Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 23 அக்டோபர், 2019

சொந்தமாக கப்பல் இல்லை... சற்றும் கலங்காமல் வ.உ.சி செய்தது இதுதான்..!!

Image result for கப்பலோட்டிய தமிழன்..!!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தூத்துக்குடியில் கடல் வாணிபத்தில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய வணிகர்களை அவர்கள் இழிவாக நடத்தினர். இதனை கண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் மனம் கொதித்தார். கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என உறுதி பூண்டார்.

வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்களுக்கு கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே, தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதை திட்டமிட்டார்.

இதன் விளைவே சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி உருவாக காரணமாக அமைந்தது. அவரின் முதல் எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் வணிகமே ஆகும்.

ஆங்கிலேயர்களின் வாணிபத்திற்கு முக்கியத்‌துவம் கொடுத்து ‌வந்த இந்திய நேவிகேஷன் நிறுவன‌த்திற்கு போட்டியாக 1906ஆம் ஆண்டு,‌ அக்டோபர் 16ஆம் தேதி 'சுதேசி நாவாய் சங்க‌ம்" என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அது எளிதில் முடிந்தபோ‌திலும், நிறுவனத்திற்கு பணம் திரட்டுவது கடும் சவாலாக இருந்தது.
கப்பல் வாங்குவதற்கு, அந்தக் காலத்திலேயே, பத்து லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்பட்டது. இதற்கான தொகையை, பங்குதாரர்களிடம் இருந்து சேகரித்து விடலாம் என்பதுதான் இவரது திட்டமாக இருந்தது.

இந்த திட்டத்திற்கான தலைவராக நான்காம் தமிழ் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரை தேவர் நியமிக்கப்பட்டார். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் செயலாளராக இருந்தார். அதிகளவில் ஆட்கள் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

மூலதனம் திரட்டுவதற்காக நாளிதழ்களில் பாரதியார் விளம்பரம் கொடுத்‌தார். ஆனால், சேர்ந்தது என்னவோ குறைந்த அளவிலான தொகைதான்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்த நிறுவனத்‌திற்கு சொந்தமாகக் கப்பல் இல்லாததை காரணமாக காட்டி, பல்வேறு இடையூறுகளை தந்தது ‌ஆங்கிலேய அரசு.

ஆனால், சற்றும் கலங்காத வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் உ‌டனே கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்து இயக்கினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சொந்தமாக கப்பலை வாங்கினாரா? இல்லையா? -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!