இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வ.உ.சிதம்பரம்பிள்ளை
மக்களிடையே, 'நான் ஆரம்பித்த இந்த கப்பல் நிறுவனம் சுதந்திர உணர்வை அனைவரிடமும்
கொண்டு வரவும், வெள்ளையனை நாட்டை விட்டு ஓட வைக்கவும்தான்" என்று
உரையாற்றினார்.
பிரிட்டிஷ்
கப்பல் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனத்தின்
வளர்ச்சியை ஆங்கிலேயர்களால் ஏற்று கொள்ளமுடியவில்லை. எப்படி இந்த சுதேசி கப்பல்
நிறுவனத்தை முடக்குவது என்று சதி திட்டம் தீட்டினர்.
இதனால்
தங்களின் கப்பல்களில் பயண விலைகளை குறைப்பது என முடிவு செய்தனர். ஆனாலும்,
தேசப்பற்று மிக்க மக்கள் இதை புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசி கப்பல்களையே
ஆதரித்தனர்.
பிரிட்டிஷ்
கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேய அரசு பல வழிகளில் உதவி செய்தது. சுதேசி கப்பல்
கம்பெனியிலிருந்து வ.உ.சிதம்பரம்பிள்ளை விலகிவிட்டால் பெருந்தொகை தருவதாக
வெள்ளையர் ஆசை காட்டினர். ஆனால் அதற்கெல்லாம் வ.உ.சிதம்பரம்பிள்ளை இணங்கவில்லை.
ஆங்கிலேய
அரசு ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டும் என்று
இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது.
சுங்க
அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பலவிதமான தொல்லைகளை
வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு ஏற்படுத்தினர்.
இந்திய
கப்பல் ஆங்கிலேயரின் கப்பலோடு மோத வந்தது என்று நீதிமன்றத்தில் பொய் குற்றம்
சாட்டப்பட்டது. ஆனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால்
வாதாடி அந்த வழக்கிலும் வெற்றி பெற்றார்.
ஆங்கிலேய
அரசால் சுதேசி கப்பல் நிறுவனத்தை தடுக்க இயலவில்லை. வெள்ளையர்கள் சுதேசி கப்பல்
நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.40,000 நஷ்டம் ஏற்படச் செய்தனர்.
வ.உ.சி.
சுதேசி கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட
உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.
இதனால்
மேலும் ஆங்கிலேயே அரசு வ.உ.சிதம்பரம்பிள்ளையின் மீது கோபம் கொண்டிருந்தது. இவரை
எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பயணிகளுக்கு இலவச பயணத்தையும், இலவச பொருட்களாக
குடை போன்றவற்றையும் கொடுத்து பல யுக்திகளை கையாண்டனர்.
ஆங்கிலேயரும்
சுதேசி கப்பல் கம்பெனியை நசுக்க முயன்றனர். இப்படிப் பலவிதமாக கொடுக்கப்பட்ட
தொல்லைகளாலும் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
அவர்கள் நடத்திய போராட்டத்தை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக