Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

டோக்கியோவை நெருங்கும் "ஹகிபிஸ்" புயல்; வீடுகளை இழக்கும் 5 மில்லியன் மக்கள்

டோக்கியோவை நெருங்கும் "ஹகிபிஸ்" புயல்; வீடுகளை இழக்கும் 5 மில்லியன் மக்கள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) மிக உயர்ந்த அவசர மழை எச்சரிக்கைகளை வானிலை வெளியிட்டது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில் மிகக் கடுமையான சூறாவளி தலைநகரை அச்சுறுத்தியுள்ளது. அதாவது மிகவும் சக்திவாய்ந்த "ஹகிபிஸ்" புயல் ஜப்பானைத் தாக்க உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் பெய்யாத மோசமான மழையை ஜப்பானை தாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் (Japan’s Meteorological Agency) சனிக்கிழமை மாலை டோக்கியோ அருகே ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி கடும் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Typhoon #Hagibis to make a potentially destructive strike on Japan, including Tokyo, this weekend: https://t.co/WD5O4qLHkI pic.twitter.com/Ch1V6Wak0w
— The Weather Channel (@weatherchannel) October 11, 2019
ஏற்கனவே இந்த "ஹகிபிஸ்" புயலால் ரக்பி உலகக் கோப்பையை (Rugby World Cup) சீர்குலைத்துள்ளது. டோக்கியோவிற்கு வெளியே நடைபெற இருந்த இரண்டு ஆட்டங்கள் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டன. மேலும் சுசுகாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஃபார்முலா ஒன் (Formula One) கிராண்ட் போட்டிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இது உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கத்தால் ராட்சச அலைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த வார இறுதியில் ஹகிபிஸ் புயல் கரையை கடக்க உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவிலும் நாட்டின் பிற இடங்களிலும் 1,200-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற 1958 ஆம் ஆண்டு சூறாவளி போல பிலிப்பைன்ஸ் மொழியான "டாக்லாக்" மொழியில் “வேகம்” என்று பொருள்படும் "ஹகிபிஸ்" கடுமையாக இருக்கக்கூடும் என்று முந்தைய நாள் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எச்சரித்திருந்தது.

5:15 pm. Conditions in Shimoda getting much rougher. Center of #Typhoon #HAGIBIS is getting closer. 966 mb. pic.twitter.com/0QUN2Xyrcm
— Josh Morgerman (@iCyclone) October 12, 2019
சனிக்கிழமையன்று ஜப்பானை நெருங்கியபோது "ஹகிபிஸ்" புயல் சற்று பலவீனமடைந்தது, ஆனால் மாலை 4 மணியளவில் காற்றின் வேகம் 100 மைலை எட்டியது. பின்னர் 136 மைல் வேகத்தில் வீசியது. 
ஏற்கனவே "ஹகிபிஸ்" புயல் ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷுவின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. 
மத்திய மற்றும் கிழக்கு ஜப்பானின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் காரணமகா 5 ஆம் நிலை எச்சரிக்கையை ஜே.எம்.ஏ அறிவித்தது.
டோக்கியோவின் நரிட்டா மற்றும் ஹனெடா விமான நிலையங்களுக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதோடு, டோக்கியோ பெருநகரப் பகுதியில் பல சுரங்கப்பாதை ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டதால், சனிக்கிழமை பிற்பகல் தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக