இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பசுபிக் கடற்பிராந்திய நாடான
கிரிபாட்டியில் அதிகப் பேருடன் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
95 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு கொள்ளத்தக்க அளவை விட மேலதிகமாக பயணிகளை கொண்டு செல்வது அந்த நாட்டில் தடைவிதிக்கப்பட்ட செயலாகும்.
அத்துடன் குறித்த படகின் பணியாளர்கள் மது அருந்தியிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற இதேபோன்ற ஒரு படகு விபத்தில் 102 பேரில் 2 பேர் மாத்திரமே உயிர் பிழைத்தனர்படகு மூழ்கிய பின்னர், அலாரம் எழுப்பப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பசி, நீரிழப்பு மற்றும் தாழ்வெப்பநிலை ஆகியவற்றால் கடலிலேயே உயிரிழந்தனர்.
இதன்போது ஒரு பெண் மகப்பேற்றை எதிர்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை கிரிபாட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக