Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 23 அக்டோபர், 2019

இயற்கை எழில் கொஞ்சும்... உதயமார்த்தாண்டபுரம் பறவையகம்...!!

Image result for . உதயமார்த்தாண்டபுரம் பறவையகம்...!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 47கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தான் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். இது பட்டுக்கோட்டையில் இருந்து 32கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சுமார் 45 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சரணாலயம் தான் இது. 1995ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சரணாலயம் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றாகும்.

சிறப்புகள் :

மேட்டூர் அணை நீர்தான் இந்த சரணாலயத்திற்கு ஆதாரம். அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் காவிரியில் பயணப்பட்டு பின்னர் கோரையாறு வழியாக இங்கு வந்து சேர்கிறது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

இவை தவிர இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், இந்தியப் பாறை நாரை, வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, நாமக்கோழி, ஊதா நாரை, சிறிய நீர்க்காகம், துடுப்பு வாயன், செங்கால் நாரை முதலிய பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

மேலும், நத்தைகுத்தி நாரை, நீலத் தாழைக்கோழி, இரவுநாரை, பாம்புத் தாரா, கூழைக்கடா, துடுப்பு வாயன், நாமக்கோழி, வெள்ளை ஐபிஸ், இந்திய பாறைகள் நாரை, வெள்ளை கழுத்து நாரை, சாம்பல்-ஹெரான், சிறிய நீர்க்காகம் என பல வகைப் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

மேலும் சைபீரியா, உருசியா, இலங்கை, பாகிஸ்தான், திபெத் உள்ளிட்ட நாடுகளின் பறவைகளும், இந்த சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

வருடத்திற்கு பத்து ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்வதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து இவை இங்குள்ள சீதோஷ்ணத்திற்காக வருவதும் பின் இனப்பெருக்கம் செய்து குடும்பத்தோடு திரும்ப செல்வதும் காலங்காலமாக நடந்துவரும் இயற்கையின் ஆச்சர்யமே.

அதிகாலை வேளையில் இவைகள் கூட்டம், கூட்டமாய் பறந்து செல்வதும் இரைத்தேடிய பிறகு அந்தி சாயும் வேளையில் திரும்புவதும், தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதும், இணையோடு விளையாடுவதும் மகிழ்ச்சி தரும் காட்சிகளாகும்.

எப்படி செல்வது?

திருவாரூர் மாவட்டத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

திருவாரூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!