Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 அக்டோபர், 2019

கடவுளிடம் சண்டை போட்ட விவசாயி..!

 Image result for கடவுளிடம் சண்டை போட்ட விவசாயி..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்குப் போனான். உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடு! என்று கூறினான்.

கடவுளும் உடனே, அப்படியே ஆகட்டும்? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என்று வரம் அருளிவிட்டு சென்றுவிட்டார். உடனே விவசாயிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

அடுத்த பயிரிடுவதற்கான பருவம் வந்தது. அப்போது அந்த விவசாயி மழையே நீ நன்கு பெய்ய வேண்டும் என்றான். மழையும் பெய்தது. மழையே போதும் நின்றுவிடு என்று கூறியபோது பெய்த மழையும் நின்றது. மழை நின்ற பிறகு ஈரமான நிலத்தில் வயலை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி வயலைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்த போது மிகவும் அதிர்ந்து போனான். ஏனென்றால், உள்ளே தானியத்தைக் காணவில்லை. மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை. அவனுக்கு மீண்டும் கடவுள் மேல் கோபம் வந்துவிட்டது. உடனே ஏ கடவுளே! என்று கோபத்தோடு கத்தினான்.

கடவுளும் வந்தார். அவரிடம் மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன். ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்? எனக் கேட்டான்.

அதற்கு கடவுள் புன்னகைத்தப்படி என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், நிலமாகிய தாயை இறுக்கிக்கொள்ளும். பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நான்கு பக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

ஆனால், நீ எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை என்றார்.

அதைக்கேட்ட விவசாயி வேண்டாமய்யா, உன் மழையும், காற்றும் நீயே வைத்துக்கொள் என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான்.

பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சனை இருந்ததால் தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சனையான போதுதான் வாகனம் உருவானது.

பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவது? பிரச்சனை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை ஆகும். எதிர்பாராத திருப்பங்கள்தான் நம் வாழ்க்கையை சுவையாக அமைத்துத் தரமுடியும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக