இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவிலான மலையில் முருகப்பெருமான் கோவில்
அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான்
அருள்பாலித்து வருவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இத்தலம் சூரபத்மன் மற்றும்
சங்குகர்ணன் வழிபட்ட தலம். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும்
பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும்.
மூலவர்
: சுப்பிரமணியசுவாமி
உத்ஸவர்கள்
: பாலசுப்பிரமணியர், முத்துக்குமாரஸ்வாமி, ஆறுமுகர்
அம்மன்
: வள்ளி - தெய்வானை தேவியர்கள்
தல
விருட்சம் : புன்னை மரம், வராஹ தீர்த்தம்
தல பெருமை :
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமான் மேற்கரங்களில் சக்தி
ஆயுதம் சூலாயுதம் ஆகியன கொண்டும், கீழ்க் கரங்களில் அபய-வரத முத்திரைகள்
கொண்டும் சதுர்புஜங்களுடன் தரிசனம்
தருகின்றார். கல்யாணக் கோலத்தில் முருக பெருமான் காட்சி தருகின்றார். சேவல்
கொடியும் வேலும் இருபுறமும் காட்சி தருகின்றன. மயில் வடக்கு நோக்கி இருப்பது இங்கு
விசேஷம்.
தாமரை
ஏந்திய வள்ளி வலப்புறமும், நீலோற்பல மலர் ஏந்திய தெய்வானை இடப்புறமும் உள்ளனர்.
இருவரும் திரிபங்கி நிலையில் நிற்கின்றனர்.
வள்ளி-தெய்வானை
உடனான பாலசுப்பிரமணியர் பிரதான உத்ஸவ மூர்த்தியாக இருக்கின்றார். பங்குனி உத்திரத்
திருவிழாவில் உலா வருபவர். இரண்டாவது உத்ஸவ மூர்த்தியான முத்துக்குமார ஸ்வாமி
பேரழகுடன் தரிசனம் தருகின்றார். மூன்றாவது
உத்ஸவர் வள்ளி-தெய்வானை சமேத மயிலேறும் ஆறுமுகர். வீரபாகுவுடன் கந்த சஷ்டி
நாட்களில் உலா வருபவர்.
தல வரலாறு :
சூர
சம்ஹாரத்தின்போது, சூரபத்மனை இரு கூறாக்கினார் முருகப் பெருமான். தன்னை வாகனமாக
ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான் சூரபத்மன். சூரபத்மனை சில காலம் வராஹ நதிக்கரையில்
தவம் மேற்கொள்ளுமாறு பணித்தார் முருகன். அவ்வண்ணமே சூரபத்மனும் மயில் உருவம் கொண்ட
இக்குன்றின் மீது தவமிருந்து முருகனின் அருளைப் பெற்றான். இந்த குன்று மயில் போன்ற
வடிவத்தில் தோற்றமளிக்கின்றது. மலையின் வடக்குப் பக்கம் உயர்ந்துள்ளது. இதனால்
மயுராசலம் என்றும் மயிலம் என்றும் பெயர் கொண்டது.
சங்குகர்ணன்
எனும் சிவகணம் சாபம் பெற்று அதனால் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்து அல்லலுற்றான்.
சிறு வயதிலேயே சித்து வேலைகள் பல செய்ததால் பாலசித்தர் என்பர். இந்த மலையிலமர்ந்து
முருகனை நோக்கி தவம் இருந்தான் சங்குகர்ணன். ஆனால் இவன் சிவன் பக்தன் என்பதால்
முருகன் அவனுக்கு காட்சி தரவில்லை. வள்ளி-தெய்வானை இருவரும் அவனுக்காக பரிந்து
பேசினர். எதற்கும் முருகன் செவி சாய்க்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தேவியர்கள்
சங்குகர்ணன் ஆசிரமத்திற்கு சென்றனர். தேவியர்களைத் தேடி வேடன் உருவில் வந்த
முருகனோடு போர் புரிந்து தோல்வியுற்ற சித்தனுக்கு காட்சி தந்தருளினார் முருகப்
பெருமான். சங்குகர்ணனின் விருப்பப்படியே இந்த மலை மீது கோவில் கொண்டு
எழுந்தருளினார் என்பது மற்றொரு தல வரலாறு.
திருவிழா
:
ஆடி
கிருத்திகை
கந்த
சஷ்டி
கார்த்திகை
தீபம்
தை
பூசம்
பங்குனி
உத்திரம்
பிராத்தனை :
மயிலம்
முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக