இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருப்பூர் அருகே திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்.
திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விக்னேஷ் குமார். இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய கல்வி சான்றிதழ் தொலைந்துள்ளது.
இதனால்
தற்காலிக மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது
கல்லூரியின் வளாகத்திற்கு செல்லும் வழியில் திருநங்கைகள் இரண்டு பேர் வந்து முகவரி
கேட்பது போல் நடித்து, விக்னேஷ் குமாரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைக்
பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து
விக்னேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொள்ளையர்களை விரட்டிப்
பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவரது
பெயர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற மணிகண்டன் என்றும் மற்றொருவர் அதே
பகுதியில் வசிக்கக்கூடிய கனி என்கிற மணி என்பதும் தெரிய வந்தது.
வழிப்பறி செய்யும் நோக்கில் இருவரும் திருநங்கை வேடத்தில் மாறியுள்ளனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விக்னேஷ் குமாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழிப்பறி செய்யும் நோக்கில் இருவரும் திருநங்கை வேடத்தில் மாறியுள்ளனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விக்னேஷ் குமாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக