இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தீபாவளி என்பது தீப ஒளியின் வெளிச்சமானது வீடுகளில் பரவுவதற்கு ஏற்ற காலமாகும். இருண்டு கிடக்கும் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த தீப ஒளி திருநாள் வருகிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் (அகங்காரம், பொறாமை, தலைக்கனம்...) இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருள் போல் மனதில் இருக்கும். தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த இது சிறந்த நாளாக அமைகிறது.
பொதுவாக தீபாவளியை ஐப்பசி மாதம் தான் கொண்டாடுகிறோம். ஏன் ஐப்பசியில் கொண்டாடுகிறோம்? அதைப்பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.
இரண்டு பேருக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு சொல்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு.
தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்கிறதோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல், எவர் இருக்கிறாரோ அவரே நீதிமான்.
அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். ஆகவே, தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது.
பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனவுறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் கொண்டாடுவதன் நோக்கம் ஆகும்.
தீபாவளியை எப்போது கொண்டாட வேண்டும்?
தமிழ் மாதமான ஐப்பசியில் (துலா மாதம்), தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை நரக சதுர்த்தசி என்றும் அழைப்பார்கள். அமாவாசைக்கு முன்னால் வரும் திதியான சதுர்த்தசி திதி அன்று விடியற்காலை நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரை தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
உலகமே போற்றும் இத்திருநாளில் நாம் அனைவரும் நரகாசுரனை வதம் செய்ததை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழும் வகையில் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்.
ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தீபாவளி இன்னும் சில தினங்களில் வர உள்ளது.
அதற்குள்...
நரகாசுரன் என்பவன் யார்?
நரகாசுரன் பெற்ற வரம்...
நரகாசுரன் செய்த அட்டகாச வேலைகள்...
நரகாசுரன் கேட்ட வரம்...
போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதோ...
இன்று முதல் நாள்தோறும்...
நரகாசுரனின் அட்டகாச வேலைகள் ஆரம்பமாகிறது...!!
படிக்க தவறாதீர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக