Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 அக்டோபர், 2019

குளியல் சோப்பு தயாரிக்கும் முறை...!


Image result for குளியல் சோப்பு தயாரிக்கும் முறை...!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வீட்டிலேயே சுயதொழில் தொடங்க ஆசையா? இது உங்களுக்காகத்தான்...!

 அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சோப்புகளை இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். இதற்கு முதலீடு என்பது குறைந்த அளவே ஆகும். வீட்டிலிருந்தே தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்ற தொழிலாகும்.

 இனி கற்றாழை சோப்பு எப்படி தயாரிப்பது என்பது பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 300 மி.லி

காஸ்டிக் சோடா - 100 கிராம்

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 600 மி.லி

கற்றாழை - தேவையான அளவு

வாசனை திரவியம் - தேவையான அளவு

சுலபமாக வீட்டில் இருந்தே சம்பாதிக்க என்ன வழி? என்று யோசித்து கொண்டிருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட செயலிதான் சுயதொழில்கள் செயலி...

தயாரிக்கும் முறை :

 முதலில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் காஸ்டிக் சோடாவை சேர்த்து சிறிது நேரம் நன்கு கலக்க வேண்டும். (குறிப்பு : காஸ்டிக் சோடாவை தண்ணீருடன் சேர்க்கும்போது கவனமாக கையாள வேண்டும்.)

 அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மாவு பதம் வரும் வரை கிளற வேண்டும்.

 பின்னர் அதில் கற்றாழை மற்றும் வாசனை திரவியம் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு கடைசியாக அச்சில் ஊற்றி காய வைக்க வேண்டும். (இதில் கற்றாழைக்கு பதிலாக பப்பாளி, வேம்பு, மஞ்சள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.)

சோப்பு காய்ந்ததும் ஒரு மாதம் கழித்து பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும். அதனை பேக்கிங் செய்து மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!