Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 அக்டோபர், 2019

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நாமக்கல்

Image result for அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நாமக்கல்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




 சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றான பாலசுப்பிரமணியசுவாமி என்னும் பழநியாண்டவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் உள்ளது. இத்தல முருகன் குன்றின் மேல் காட்சியளிக்கிறார்.

 மூலவர் : பாலசுப்பிரமணியர்

 உற்சவர் : கல்யாண சுப்பிரமணியர்

 தீர்த்தம் : கிணற்று தீர்த்தம்

 ஆகமம்ஃபூஜை : சிவாகமம்

 பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

 ஊர் : மோகனூர்

மாவட்டம் : நாமக்கல்

தலவரலாறு :

 ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் சிவனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் சிவ பொருமான். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி! என்றார் சிவ பெருமான்.

 பெற்றோரே உலகம் என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டார்.

 நாரதர் கொடுத்த கனியை தனக்கு தராததால் கோபம் கொண்ட முருகன், கைலாயத்திலிருந்து தென்திசை நோக்கி வந்தார். சிவனும், பார்வதியும் அவரை சமாதானம் செய்தும் கேட்கவில்லை. அவரை பின்தொடர்ந்த அம்பிகை, 'மகனே நில்!" என்று அழைத்தார். தாயின் சொல் கேட்ட முருகன், நின்றார்.

 அவரிடம் பார்வதி, கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால், முருகன் கேட்கவில்லை. தான் தனித்து இருக்க விரும்பியதாக கூறிய அவர் பழநிக்குச் சென்று குடிகொண்டார்.

 இவ்வாறு முருகனை அம்பாள் அழைத்தபோது, இத்தலத்தில் நின்றதாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவர் பாலகனாக, 'பால சுப்பிரமணியர்" என்ற பெயரில் அருளுகிறார்.

தல பெருமை :

 இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோவிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

 இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார்.

 கோவிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோவில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார்.

பிராத்தனை :

 செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக