Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 அக்டோபர், 2019

உங்களுக்கும் மனக்குழப்பமா?

Image result for மனக்குழப்பம்?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர்களுடன் வந்த சீடர்கள் புத்தரிடம் மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதைக்கேட்ட புத்தர் பதில் எதுவும் கூறாமல் அமைதி காத்தார். அந்த சமயத்தில் அவர்கள் அங்கிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். பிறகு அங்குள்ள ஏரியை பார்த்ததும், புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். அப்போது அந்த ஏரி கலங்கிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீரை எப்படி குடிப்பது? இதை எப்படி குருவிற்குக் கொண்டுப்போய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

தன் குருவிடமும் நடந்தவற்றை தெரிவித்தார். ஒரு மணிநேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்கு சென்று தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். சீடனும் நீர்நிலையருகே சென்று பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது. சேறும், சகதியுமாக இருந்த நீர் இப்போது தெளிவாக இருந்தது. இப்போது பானையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரையும், சீடனையும் பார்த்தார். பிறகு அவர் சீடனிடம் தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்? நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று! என்று சீடன் கூறினான். அதற்கு புத்தர் நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அதனால், உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா? என்றார். சீடனும் ஆமாம் சுவாமி! என்றான்.

பிறகு புத்தர், நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டுவிட வேண்டும். சிறிது கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். பின்பு அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் அந்த நேரத்தில் செய்யக்கூடாது. மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் கூடாது. அதுதானாகவே அமைதியாகிவிடும் என்று சீடர்களிடம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக