இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சொந்தமாக காரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும்
செல்ஃப் டிரைவிங் வாடகை டாக்சி திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆன்லைன் மூலமாக வாடகை கார் சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம்
வர்த்தக விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற சேவையை
தவிர்த்து, நீண்ட தூர பயணங்களுக்கான வாடகை கார் சேவையை அறிமுகப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது வாடிக்கையாளர்கள் காரை வாடகைக்கு
எடுத்து சொந்தமாக ஓட்டும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது. ஓலா டிரைவ்
என்ற பெயரில் இந்த புதிய வாடகை கார் திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த
உள்ளது.
முதல்கட்டமாக பெங்களூர் நகரில் இந்த புதிய செல்ஃப் டிரைவிங்
திட்டத்தை கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட
பிற நகரங்களிலும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
தற்போது செல்ஃப் டிரைவிங் வாடகை கார் நிறுவனங்கள் வழங்கி வரும்
சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் கீழ் ஓலா டிரைவ் திட்டம்
செயல்பாட்டுக்கு வருகிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் அடிப்படையில்,
எவ்வளவு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும், எவ்வளவு மணிநேரம் தேவைப்படும், எரிபொருள்
அளவு உள்ளிட்டவற்றை கொடுத்து அதன் அடிப்படையில் புக்கிங் செய்து கொள்ளலாம்.
இதன்மூலமாக, பிற செல்ஃப் டிரைவிங் கார் சேவை நிறுவனங்களைவிட ஓலா
டிரைவ் மூலமாக காரை வாடகைக்கு எடுக்கும்போது 30 சதவீதம் கட்டணம் குறைவாக
இருக்கும். இதனால், ஓலா டிரைவ் திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்
என்று தெரிகிறது.
அடுத்த ஆண்டுக்குள் 20,000 கார்களை இந்த திட்டத்தின் கீழ்
பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்களில்
ஓலா நிறுவனத்தின் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
பொருத்தப்பட்டு இருக்கும்.
இதன்மூலமாக, பல்வேறு தகவல்களையும், பொழுதுபோக்கு வசதிகளையும்
வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்காக 24 மணிநேர உதவி
மையமும் செயல்படும். அவசரகால பட்டன், சாலை அவசர உதவி மற்றும் வாகனத்தின்
இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதிகளுடன் வர இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக