Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஹைதராபாத் கத்தரிக்காய் கறி

Image result for ஹைதராபாத் கத்தரிக்காய் கறி
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



   
சூடான சாதத்துடன் சாப்பிட ஹைதராபாத் கத்தரிக்காய் கறி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

விதையில்லாத சிறிய கத்திரிக்காய் - 15
பழுத்த தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
வேர்க்கடலை, எள் - தலா ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கெட்டியான பால் - ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை

கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை அரைத்து கொள்ளவும்.

கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தக்காளி சாறு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும்.

கத்திரிக்காய் கலவையில் பாலைச் சேர்த்து வேக விடவும்.

உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.

சுவையான ஐதராபாத் கத்தரிக்காய் கறி தயார்!


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!