Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 அக்டோபர், 2019

அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், அறந்தாங்கி-புதுக்கோட்டை

Image result for அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், அறந்தாங்கி-புதுக்கோட்டை
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




  வீரமாகாளியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலாகும். தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க காளியம்மன் கோவில்களில் வீரமாகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். ஆடிப் பெருந்திருவிழா, இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மூலவர் : வீரமாகாளியம்மன்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : அறந்தாங்கி

மாவட்டம் : புதுக்கோட்டை

தலபெருமை:

 இந்த ஆலயம் சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இக்கோவில் வசந்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் அன்னை, திருமுடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறாள். செவியில், சிவனாருக்கு உரிய அணிகலனை அணிந்திருக்கும் அழகே அழகு!

 தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் வீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.

தல வரலாறு :

 ஒரு காலத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி எனும் கிராம மக்களால் வழிபட்டவளாம் வீரமாகாளியம்மன். பிறகு தற்போதைய கோவில் இருக்கும் இடமான அறந்தாங்கியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மூக்குடி கிராமத்தில் எழுந்தருளினாள் என்கிறது தல வரலாறு.

 வனவாசத்தின்போது, வீரவனம் என்று அழைக்கப்பட்ட அறந்தாங்கிப் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வந்ததாகவும், அப்போது அம்மனை அவர்கள் வணங்கியதாகவும், அவர்கள் தங்குவதற்கு நல்ல இடத்தை அம்மன் காட்டி அருளியதாகவும் சொல்வர். அதனடிப்படையில் இத்தலம் ஏற்பட்டதாகவும் சொல்வதுண்டு.

பிராத்தனை :

 கல்யாண வரம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

 சாதாரணப் பொட்டு அல்லது தங்கம், வெள்ளியில் பொட்டு செய்து சமர்ப்பித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். மாவிளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

 ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து வீரமாகாளியம்மனை வேண்டினால், வாழ்வில் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

திருவிழா :

சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம் மற்றும் சிவராத்திரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக