இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
காட்டில் சிறுத்தை ஒரு நாள் பசியுடன் உணவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்
சிறுத்தை அங்கு ஒரு கவுரி மானையும், புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும்
மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
அதைப்
பார்த்ததும் சிறுத்தை மிகுந்த கவனத்துடன் மலையடிவாரத்திற்கு சென்றது. ஆனால், அங்கு
இருந்த இரண்டு மான்களில் எதை தாக்குவது என அது முடிவு செய்வதற்கு மிகக்
குழம்பியது.
அந்த
நேரத்தில் அங்கிருந்த மான்கள் இரண்டும் சிறுத்தையைப் பார்த்து பயந்து வேகமாக ஓடத்
தொடங்கியது. சிறுத்தையும் அந்த மான்கள் ஓடும் திசையில் அவைகளை துரத்திக் கொண்டே
வந்தது. எதைத் துரத்தலாம் என்று தயங்கி தயங்கி யோசித்துக் கொண்டே ஓடியது.
பிறகு,
சரி.. கவுரி மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் என்று முடிவு
செய்து அந்த மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால், அதற்குள் அது தொலைதூரம் ஓடிப்
போய் விட்டது. உடனே அது வேகமாக ஓடக்கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது என்று எண்ணி
யோசித்துக் கொண்டு நின்றுவிட்டது.
அதற்கு
பசி வேறு அதிகமாகி விட்டது. அதனால், புள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து
வேறு பாதையில் ஓடியது. ஆனால், புள்ளிமான் அதன் கண்ணிற்கு தென்படவில்லை. அதுவும்
தப்பித்து ஓடிவிட்டது. அதனால் சிறுத்தை பசியால் சோர்ந்து அந்த இடத்திலேயே
மயங்கிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக