Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 அக்டோபர், 2019

சுவை மிகுந்த தேங்காய் பர்பி செய்வது எப்படி...?

Coconut burfi



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப் (துருவியது)
சர்க்கரை - 1 கப் 
ஏலக்காய் - 4 (பொடித்தது)
முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக்கியது)
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:

முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். லேசாக சூடு ஆறியதும்  கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.

குறிப்பு: அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!