Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 அக்டோபர், 2019

அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோவில் பசுமலை

Image result for அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோயில் பசுமலை
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குமுக எல்லைக்கோவிலாக திகழும் அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலையிலுள்ளது.
 கோவில்களில் முளைப்பாரி விழாவின்போது, கரக அலங்காரம் இக்கோவிலில் இருந்துதான் நடப்பெறும்.

 மூலவர் : விபூதி விநாயகர்

 பழமை : 500 வருடங்களுக்குள்

தலபெருமை :

 கோவில் கட்டப்பட்ட காலத்தில் மூலவர் விநாயகப்பெருமான், தாமரை மலர் மேல் அமர்ந்து அருள்பாலித்தார். அவருக்கு முன்பு நந்தி இருந்தது. விநாயகப்பெருமானை சிவபெருமானாக வழிபட்டதால் நந்தி அமைக்கப்பட்டிருந்தது.

 தற்போது மூலவர் அருகில் ராகு, கேது, முன்புறம் மூஞ்சுறு அமையப்பெற்றுள்ளது. கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சியும் இவர்கள் முன்பு நந்தியும், மறுபுறம் பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளது.

தல சிறப்பு :

 ராகு, கேதுவுடன், விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பது சிறப்பு.

திருவிழா :

 விநாயகர் சதுர்த்தி

 சங்கரஹர சதுர்த்தி

பௌர்ணமி பிரதோஷ பூஜைகள் நடக்கிறது.

பிராத்தனை :

 சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக