இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
படத்தின்
முதற்கட்ட படப்பிடிப்பின்போதே செல்வா, இந்தப் படம் தன்னுடைய கதையைத் திருடி
எடுக்கப்படுவதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வெளியீட்டுக்கு
இன்னும் பத்து நாள்கள்கூட இல்லாத நிலையில் தற்போது `பிகில்' படத்துக்கு அடுத்த
சிக்கல் எழுந்துள்ளது. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என மீண்டும் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் உதவி இயக்குநர் கே.பி.செல்வா.
இந்த
ஆண்டு தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது விஜய்-அட்லி கூட்டணியின் பிகில்
திரைப்படம். 'தெறி', 'மெர்சல்' என இரண்டு ப்ளாக்பஸ்டர் படங்களைத் தொடர்ந்து
மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணியிடமிருந்து `பிகில்' வெளியாகவுள்ளதால்
படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதனிடையே,
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பின்போதே செல்வா, இந்தப் படம் தன்னுடைய கதையைத்
திருடி எடுக்கப்படுவதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்திருந்தார். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அந்த வழக்கு அப்போது
தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில்,
இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதைத் தொடர்ந்து
முன்னோட்டத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் 'பிகில்' கதை தன்னுடையது
எனக் கூறி அதன் வெளியீட்டுக்குத் தடைகோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் செல்வா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக