Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 அக்டோபர், 2019

தோழி அழைக்கிறார்... விஷ ஊசி போட்டு தற்கொலை!- சென்னை நர்ஸ் மரணத்தில் விலகாத மர்மம்

தற்கொலை செய்த நர்ஸ் நந்தினி
தற்கொலை செய்த நர்ஸ் நந்தினி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட நர்ஸ், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள் நந்தினி (24). இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார். நந்தினியும் அவரின் சகோதரியும் மட்டும் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். நந்தினியின் பெற்றோர், பெரியபாளையத்தில் வசித்துவருகின்றனர்.

நர்ஸ் நந்தினியின் பெற்றோர்
நர்ஸ் நந்தினியின் பெற்றோர்

இந்தநிலையில், நந்தினியின் சகோதரி பாரிமுனையில் உள்ள மருந்துக்கடைக்கு நேற்று வேலைக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் நந்தினி தனியாக இருந்தார். பணி முடிந்து வீட்டுக்கு வந்த நந்தினியின் சகோதரி, படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி நந்தினி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
நந்தினியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து சாத்தாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் நந்தினியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 நந்தினியின் சகோதரியிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது படுக்கையின் அருகே ஊசி மற்றும் மருந்து செலுத்தும் சிரிஞ்ச் ஆகியவை கிடந்தன. அதோடு நந்தினி எழுதிய தற்கொலைக்கான கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். பயன்படுத்தப்பட்ட அந்த ஊசியில் விஷ மருந்து ஏற்றப்பட்டிருந்தது. இதனால் விஷ ஊசி போட்டு நந்தினி தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். நந்தினியின் பெற்றோருக்குத் தகவல் தெரிந்து அவர்களும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். நந்தினியின் சடலத்தைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
நந்தினி எழுதிய கடிதத்தில் ``அன்புள்ள அம்மா, அப்பா, அக்கா அவர்களுக்கு நான் இந்த முடிவை எடுத்ததற்கு என்னை மன்னிச்சிடுங்க. அக்கா, நீ அம்மாவையும் அப்பாவையும் நல்லப்படியா பார்த்துப்ப என்று தெரியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் அவர்களை கடைசி காலம் வரை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் கடமை. உன்னுடைய வாழ்க்கையும் நல்லபடியாக அமையும். உன்னையும் நீ நல்லபடியாகப் பார்த்துக்கொண்டு அவர்களையும் நல்லபடியாக பார்த்துக்கோ. நான் இந்த முடிவு எடுத்ததற்கு வீட்டில் உள்ளவர்களோ அல்லது மற்றவர்களோ காரணமில்லை. இந்த முடிவுக்கு நான்தான் காரணம். இதனால் எல்லோரும் என்னை மன்னிக்கவும். நான் இல்லை என்று நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. நான் எங்கும் போக மாட்டேன். உங்களோடுதான் இருப்பேன். என்னைக் கொண்டு போய் ஊரில் புதைக்கவும். இதுதான் என் விருப்பம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நர்ஸ்நந்தினி  எழுதிய தற்கொலை கடிதம்
நர்ஸ்நந்தினி எழுதிய தற்கொலை கடிதம்
 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை ஊசியில் ஏற்றிய நந்தினி, அதைப் பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்து அவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். நந்தினியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.
நந்தினியின் அப்பா வெங்கடேசனிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் ஒரு தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். ``நந்தினியின் தோழி ஒருவர் 9-வது வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டார். அவர் அடிக்கடி தன்னை அழைப்பதாக நந்தினி எங்களிடம் கூறியுள்ளார். அதனால்கூட நந்தினி தற்கொலை செய்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக