Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 அக்டோபர், 2019

மாடியிலிருந்து விழுந்த சிறுமி…வசமாய் சிக்கிய சித்தி.. – விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!

 சிறுமி ராகவி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை சேலையூரை அடுத்த செம்பாக்கம், ஏரிக்கரைத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் குடும்பத்தோடு குடியிருந்தார். இவரின் 2-வது மனைவி சூர்யகலா.
பார்த்திபனின் மூத்த மனைவிக்கு ராகவி என்ற 6 வயது மகள் இருந்தார். நேற்று மாலை ராகவி, அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சேலையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
 apartment
அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து ராகவி இறந்திருக்கலாம் என்றுதான் அவரின் உறவினர்களும் போலீஸாரும் முதலில் கருதினர். ஆனால், போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் சிறுமி ராகவியின் சித்தியும் பார்த்திபனின் 2-வது மனைவியுமான சூர்யகலா சிக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், “ துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பார்த்திபன் பணியாற்றிவருகிறார். இவரின் முதல் மனைவி சரண்யா. இவரின் மகள்தான் ராகவி. கடந்த 2014-ம் ஆண்டு சரண்யா இறந்துவிட்டார்.
இதனால் பார்த்திபனின் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவதாக சூர்யகலாவைத் திருமணம் செய்துவைத்தனர். ராகவியை கவனித்துக்கொள்ள சரண்யாவின் அம்மா வளர்மதி (85) பார்த்திபனின் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் வளர்மதி, சொந்த ஊருக்குச் சென்றார். இதனால் ராகவியை சூர்யகலா கவனித்துவந்தார். இந்தச் சமயத்தில்தான் அவர் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதுதொடர்பாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சம்பவம் நடந்த மொட்டை மாடிக்குச் சென்றபோது ராகவி தவறி விழ வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த மொட்டை மாடியின் தடுப்புச் சுவர் 2 அடிக்கு மேல் உள்ளதால் ராகவியின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் சூர்யகலாவிடம் விசாரித்தோம். அப்போது அவர் ராகவியை மாடியிலிருந்து தூக்கி கீழே வீசிய தகவலை ஒத்துக்கொண்டார். இதனால் சூர்யகலாவை கைது செய்துள்ளோம். தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார்” என்றார்.
ராகவியைக் காணவில்லை என்று சூர்யகலாதான் முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடம் கண்ணீர்மல்க கூறியுள்ளார். பிறகு பார்த்திபனுக்கு போனில் தகவலைத் தெரிவித்துள்ளார். ராகவியை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர்
. மொட்டை மாடிக்குச் சென்றவர்கள் அங்கிருந்து கீழே பார்த்தபோதுதான் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் புதராக காணப்படும் பகுதியில் ராகவி சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. மாடியிலிருந்து அவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆயுத பூஜை விடுமுறை காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஊருக்குச் சென்றதால் ராகவியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ராகவியை மற்றவர்களுடன் தேடியபோதுகூட சூர்யகலாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. ஆனால், போலீஸார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் சூர்யகலா கொலை வழக்கில் சிக்கிக்கொண்டார்.
ராகவி மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் மீதுள்ள ஆத்திரத்தில் சூர்யகலா இந்தக் கொலை செய்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராகவியின் சடலத்தைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
குறிப்பாக அவரின் பாட்டி வளர்மதி, `உன்னையும் என்னோடு ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தால் இப்படி நடந்திருக்காதே’ என்று கதறி அழுதார். முதுமையிலும் பேத்தியைக் கவனித்து வந்த வளர்மதிக்கு ராகவியின் இழப்பு ஈடுகட்ட முடியாது.
6 வயது சிறுமி ராகவியை எப்படி கொலை செய்தேன் என்ற விவரத்தை விரிவாகக் கூறியுள்ளார் சூர்யகலா. அதை போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். அதைக் கேட்டு போலீஸாரே ஒருகணம் திகைத்துப் போயுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக