இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எசென்ஷியல்
நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ரூபின் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும்
ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை உருவாக்கியவரும் எசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான ஆண்டி
ரூபின் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை தனது
ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஸ்மார்ட்போனின் பின்புறம் பெரிய கேமரா
மற்றும் கைரேகை செனஅசார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
வித்தியாசமாக
காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஜெம் (GEM) என அழைக்கப்படுகிறது. இத்துடன்
ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூகுள் மேப்ஸ் செயலி காணப்படுகிறது. மேல்புறம் இயர்பீஸ்
கிரில், போனினை சுற்றி பெசல்களும், இயர்பீஸ் கிரிலின் கீழ் நாட்ச்
வழங்கப்பட்டிருக்கிறது.
செங்குத்தாக
இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர் இன்டர்ஃபேசின் மேல்புறம் பேட்டரி இன்டிகேட்டர்,
இன்டர்ஃபேசுக்கு ஏற்ற வகையில் கூகுள் மேப்ஸ் செயலி மாற்றப்பட்டிருக்கிறது. புதிய
ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய யு.ஐ. காணப்படுகிறது. இதன் கீபோர்டு அனுபவம்
எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போன்
வடிவமைப்பை பொருத்தவரை இதில் டி9 ரக கீபோர்டு வழங்கப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க பன்ச் ஹோல் ரக கேமரா
வழங்கப்படும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக