Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சேமியா பால் பாயாசம் செய்ய...!

semiya paal payasam


தேவையான பொருட்கள்:

சேமியா - 200 கி. (நெய்யில் லேசாக வறுத்தது)
பால் - 240 மி.லி. 
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி (பாலில் கரைத்தது)
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி 
சர்க்கரை - 6 மேசைக்கரண்டி 
முந்திரி - 40 கி. (நெய்யில் வறுத்தது)
காய்ந்த திராட்சை - 1 தேக்கரண்டி (நெய்யில் வறுத்தது)
நெய்  - 4 தேக்கரண்டி
செய்முறை:

தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வேகும் வரை விட்டு, பிறகு அத்துடன் பால் சேர்க்கவும். தொடர்ந்து கலக்கிவிடவும். மீதமுள்ளப் அதாவது குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை, முந்திரி, காய்ந்த திராட்சை அத்துடன் சேர்த்து,  நன்றாக கலக்கி, சூடாக பரிமாறவும். சுவையான சேமியா பால் பாயாசம் தயார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக