Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 அக்டோபர், 2019

விருட்சிக ராசிக் காரர்கள் என்னென்ன தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்?

Image result for விருச்சிக ராசிக் காரர்கள் என்னென்ன தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்?



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், 'எனது சொந்த ராசிப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்?’ என்று கேட்பவர்களுக்காக நான் ராசி அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு...
செவ்வாயை ராசி அதிபதியாகவும், சூரியனை 10 ஆம் அதிபதியாகவும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் ரியல் எஸ்டேட், வீடு (அல்லது வீட்டின் மூலம் வாடகை), நிலம், விவசாயம், தீயணைப்புத் துறை, ராணுவம், சர்க்கஸ் அல்லது வேறு ஏதேனும் சாகச தொழில் (சிலம்பம், குத்துச் சண்டை போன்றவைகள்), தோப்புகள் மூலம் வருமானம் பெறுதல், மின் வாரியங்கள், சமையல் தொழில் (அல்லது நெருப்பின் மூலம் பிழைக்கும் தொழில்கள் - காஸ், எரிபொருள் விற்பனைகள்), பயங்கர கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலைகள், பொறியியல், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அல்லது நிபுணர் (இது போல ரத்தம் பார்க்கும் வேறு தொழில்கள் அதாவது ஆய்வுகூடத்தில் பரிசோதகர் போன்றவைகளை சொல்கிறேன்), அரசியல் சம்மந்தமான துறை, அரசுத் துறை, சிவப்பு வண்ண கற்களை விற்கும் தொழில், மாந்திரீகம், மிளகாய், பூண்டு அல்லது வெங்காய வியாபாரம், இரசாயன வியாபாரம், காகிதம், தாவரப் பொருள்கள் வியாபாரம்,புகையிலை, சிகரெட் வியாபாரம், வழக்கறிஞர், மர வியாபாரம்,கற்பூரம் - ஊதுபத்தி வியாபாரம், கட்டுமானத் துறை போன்ற ஏதேனும் ஒரு தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!