Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 அக்டோபர், 2019

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோவில், தேனி

Image result for அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோவில், தேனி


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


  உலகத்தை உருவாக்கிய இறைவன், தான் படைத்த இந்த பூமியில் தோன்ற விரும்பினார். அதன் காரணம், நம் நலனுக்காகவே. அதனால்தான் தம்முடைய படைப்பில் உருவான மனிதர்கள் எப்படி இந்த பூமியில் தனியாக வாழும் என்ற எண்ணத்தில் மனிதர்களுடன் ஒருவராக தெய்வங்கள் பூலோகத்தில் தோன்றினார்கள். அவ்வாறு தேனி மாவட்ட மக்களின் குறைகளை போக்க வேலப்பர் எப்பர்டி உருவானார் என்று பார்க்கலாம்.

எழில் பொங்கும் இயற்கை சூழ்ந்துள்ள தேனி மாவட்டத்திலுள்ள தெப்பம்பட்டியில் அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.
  மூலவர் : வேலப்பர்
  தல விருட்சம் : மாமரம்
  தீர்த்தம் : மாவூற்று
  பழமை  : 500 வருடங்களுக்குள்
  ஊர் : தெப்பம்பட்டி
 மாவட்டம் : தேனி
  
தலவரலாறு :
  தேனியில் மாமரம் நிறைந்து இருக்கும் இடத்தில் சிறிய அளவில் வள்ளி கிழங்கையும் பயிர் செய்தார் ஒருவர். ஒருநாள் வள்ளி கிழங்கை எடுக்கும் போது அதில் ஒரு வள்ளிகிழங்கை மட்டும் தோண்டி எடுக்கவே முடியவில்லை. 'என்னடா இது ஆச்சரியமாக இருக்கிறதே" என்ற சந்தேகத்துடன், இதை விடகூடாது என்ற முடிவுடன் தோண்டி பார்த்தார்.

 அவருக்கு அப்போது மண்ணுக்குள் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர் தொடர்ந்து தோண்ட தோண்ட வள்ளிக்கிழங்கின் வேரின் முடிவில் வள்ளியின் மணவாளன் முருகப்பெருமான் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர்.

 இதை கண்ட அந்த நபர் ஊர் மக்களிடம் கூறினார். ஊர்மக்கள் முருகப்பெருமானுக்கு அந்த இடத்திலேயே கோவில் கட்டி முருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள்.

தல பெருமை :

 தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.

 மாமரத்தின் அடியில் ஊற்று பொங்கிக்கொண்டிருப்பதால் இப்பகுதி 'மாவூற்று" என்றும், இத்தல முருகன் 'மாவூற்று வேலப்பர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

 வேலப்பர் அருள்பாலிக்கும் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்தமாதாக்கள், அடிவாரத்தில் சக்தி கருப்பணசாமி ஆகியோர் அமைந்திருந்தும் பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்.

பிராத்தனை :

 காமாட்சி அம்மன் காஞ்சி தலத்தில் மாமரத்தின் அடியில் தவம் செய்து சிவபெருமானின் அருளை பெற்றாரே, அதுபோல இந்த மாவூற்று வேலப்பரை வணங்கினால் குரு பிராப்தம் கிடைக்கும்.

பல வருடங்களால் வியாதியால் அவதிபட்டவர் மாவூற்று வேலப்பரை வணங்கி இந்த மாமரத்தின் ஊற்று நீரை தலையில் தெளித்து கொண்டாலே தீராத வியாதிகள் நீங்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக