இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மரங்களிலுள்ள இலைகளின் வேறுபட்ட வடிவத்திற்கு காரணமானது நீண்டகால சுற்றுச்சூழல் (ecological) மற்றும் பரிணாம வளர்ச்சியின் வரலாறுகளே (evolutionary) ஆகும்.
தாவரங்களுக்கு இலைகளே(leaves) உணவு தயாரிக்கும் உறுப்பாக(food producing organs) உள்ளது.
தாவர இலைகள் சூரிய ஒளி மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றை ஒளிச்சேர்க்கைக்காக (photosynthesis) உட்கவர்கிறது.
இலைகள் நீள்வட்டம்(ovate),இதய வடிவம்(Heart shaped),பல்/கூரிய வடிவம்(lobed shaped),கத்தி வடிவம்(Lance shaped) மற்றும் கூட்டு வடிவங்களில் (compound shaped) காணப்படுகிறது.
மரத்தின் வேறுபட்ட இலை வடிவங்களானது கீழ்கண்ட பரிணாம வரலாற்று காரணங்களினால் பெறப்பட்டுள்ளது.
அவை வெப்பத்தை நிர்வகித்தல் (manage heat), ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் (retain moisture), தாவரவளத்தை எதிர்த்தல்(resist herbivory),காற்றின் சேதத்தை குறைத்தல் (minimize wind damage), ஒளிக்குறுக்கீட்டை மேம்படுத்துதல்(improve light interception) மற்றும் திறமையாக வேரிலிருந்து இலைக்கு நீரை எடுத்துச் செல்லும் சிறந்த அமைப்பு (more efficient vascular network).
மேலும் அறிக
ஒளிச்சேர்க்கை பெரும்பாலான தாவரங்களில் இலைகளில் நடைபெறுகிறது. இருப்பினும் சில தாவரங்களில் பச்சை தண்டுகளில்(Green stems)நடைபெறுகிறது.
கூம்பு வடிவ(conifers) மரங்கள் கூர்மையான இலைகளைக் கொண்டுள்ளன.
அவை வறட்சியை எதிர்ப்பதற்காக சிறப்பாக(specialized to resist desiccation) கட்டமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக