இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எந்த
வகை வலையாயினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டு வரும் மீன ராசி
அன்பர்களே...!!
இதுவரை
உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இதற்கு
மேல் தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு செல்கிறார். சனி தான்
இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக பஞ்சம
பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும்
பார்க்கின்றார்.
பேச்சுக்களில்
நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில
தன வரவுகளால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மை உண்டாகும். வீட்டில்
சுபக்காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்கள்
தங்களின் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைக் காட்டிலும் தாமே முடிப்பது
நன்மையை தரும். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யவும். வேலை தொடர்பான
ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம்
மற்றும் ஆதரவுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
தேவையற்ற
எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து
நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகளுக்குள் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.
இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். திறமைக்கேற்ப வேலை
வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி
பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறையில்
இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகும்.
தேர்வுக்கு தேவையான பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது மேன்மையை தரும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில்
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும், எதிர்பார்த்த லாபங்களால் சேமிப்பு
மேம்படும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு
சுபிட்சமான காலமிது. வெளிநாடு தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான யோகம் ஏற்படும்.
தொண்டர்களிடத்தில் உங்களின் மீதான செல்வாக்கு மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த
செயல்பாடுகளில் அக்கறை வேண்டும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில்
உள்ளவர்களுக்கு சிறப்பான காலம் ஆகும். விருதுகள் கிடைக்கும். நிலுவையில்
இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். மனதில் இருக்கும்
பலவகைப்பட்ட குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
மனை
சார்ந்த செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்கள் தொடர்பான பராமரிப்பு
செலவுகள் மேம்படும். புதிய பயிர் விளைச்சலில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகள்
பெற்று முடிவு செய்யவும். நெல்லி மற்றும் கொடிவகை விளைச்சல்கள் சாதகமான பலனைத்
தரும்.
வழிபாடு :
மூல
நட்சத்திரத்தன்று வடமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக