இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்..!!
ஒவ்வொரு
மாதத்திலும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அதிலும் கார்த்திகை மாதத்தில் பல சிறப்புகள்
உண்டு.
கார்த்திகையில்
நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல்
நாளன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
மகாவிஷ்ணு,
பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்த மாதம் கார்த்திகை.
இறைவழிபாட்டிற்கு மிகச்சிறந்த மாதம் கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது.
கார்த்திகை மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு
சிறப்பு?
கார்த்திகை
மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால்
அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கார்த்திகை
மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும்
நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
விஷ்ணு
பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் மோட்ச நிலையை
அடைவார்கள்.
கார்த்திகை
மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும்
ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
கார்த்திகை
மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.
கார்த்திகை
தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.
கார்த்திகை
மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும்
எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை
மாதத்தில் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று
தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
கார்த்திகைகளில்
முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கார்த்திகை
பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.
கார்த்திகை
மாதத்தில் பௌர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபடுவது
சிறந்தது.
கார்த்திகையில்
சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
கார்த்திகை
மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு
அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.
கார்த்திகை
மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ, விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப
தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால்,
குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக