இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹைலைட்ஸ்
1.
ஊடக அறிக்கையின்படி, இந்த மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடுவதற்கு
முன்பு, சீனா பல முறை அதை எதிர்த்தது.
2.
சீனா அமெரிக்க தூதரை வரவழைத்து, செனட் நிறைவேற்றிய
ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம், 2019 மசோதாவை ரத்து செய்யக் கோரியது.
3.
அமெரிக்கா அவ்வாறு செய்யாவிட்டால், அது கடுமையான
விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
பெய்ஜிங்கின் ஆட்சேபனைகளை மீறி,
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை ஆதரிக்கும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
டிரம்பின் கையொப்பத்திற்குப் பிறகு ஹாங்காங்
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம், 2019 மசோதா ஒரு சட்டமாக மாறியுள்ளது. மனித
உரிமை மீறல்கள் மீதான தடைகளை இந்த சட்டம் வழங்குகிறது.
இதனிடையே காங்கிரசும் மற்றொரு மசோதாவை
நிறைவேற்றியுள்ளது, அதில் டிரம்பும் கையெழுத்திட்டார். இதன் கீழ், ஹாங்காங்
காவல்துறைக்கு ஏற்றுமதி செய்ய கண்ணீர்ப்புகை, மிளகு, ரப்பர் தோட்டாக்கள் போன்ற
கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிரபர் டிரம்ப் தனது அறிக்கையில்
குறிப்பிடுகையில்., "ஜனாதிபதி ஜி சின்ஃபிங் மற்றும் ஹாங்காங் மக்களை
கௌரவிப்பதற்காக இந்த மசோதாவில் நான் கையெழுத்திட்டேன்" என்று
தெரிவித்துள்ளார். சீனா தனது பிடிவாதமான நிலையை கைவிட்டு, ஹாங்காங் தலைவர்கள்
மற்றும் பிரதிநிதிகளுடனான அதன் வேறுபாடுகளை இணக்கமாக தீர்த்து வைக்கும் என்ற
எதிர்பார்ப்புடன் இந்த சட்டம் தயாரிக்கப்படுகிறது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, இந்த மசோதாவில் டிரம்ப்
கையெழுத்திடுவதற்கு முன்பு, சீனா பல முறை அதை எதிர்த்தது. சீனா அமெரிக்க தூதரை
வரவழைத்து, செனட் நிறைவேற்றிய ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டம், 2019
மசோதாவை ரத்து செய்யக் கோரியது. அமெரிக்கா அவ்வாறு செய்யாவிட்டால், அது கடுமையான
விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
டிரம்பின் கையொப்பத்திற்கு முன்னர் இந்த
மசோதாவை ரத்து செய்யுமாறு பெய்ஜிங் தொடர்ந்து அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்தது.
இதுதொடர்பாக பெய்ஜிங் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை அளித்தது. டிரம்பின்
இந்த நடவடிக்கை, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது போன்றுள்ளது என கருதியது,
எனினும் டிரம்ப் சீனாவின் எதிர்ப்புகளை மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக