இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால்
தற்கொலை செய்து கொள்வேன் என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் மிரட்டல்
விடுத்துள்ளார்.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி
செய்து விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி
விட்டனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின்
உதவியை மத்திய அரசு நாடியது.
பின்பு நிரவ் மோடிக்கு எதிராக
ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில்
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய
வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது
செய்தது.வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ளார் நிரவ் மோடி.
சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை
தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனு
தாக்கல் செய்தார்.அப்பொழுது நிரவ் மோடி வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster)
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிறையில் வைத்து
பலமுறை நான் பலமுறை தாக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.மேலும் இந்தியாவிற்கு
நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக நீதிமன்றம் நிரவ் மோடியின்
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கின் விசாரணையை
டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக