Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 நவம்பர், 2019

பசும்பாலில் தங்கம் இருக்கிறது லோன் கொடுங்க சார்! நிதி நிறுவனத்தை அலறவிட்ட மனிதர்!

பசும்பாலில் தங்கம் இருக்கிறது லோன் கொடுங்க சார்! நிதி நிறுவனத்தை அலறவிட்ட மனிதர்!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com






மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ இந்திய நாடு கிருஷ்ணர் பூமி. ஆதலால் நாட்டு பசுமாடுகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். இனியும் மதிப்போம். குழந்தை தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை தான் குடிக்கிறார்கள். ஆதலால் பசுவதையை நாங்கள் எதிர்க்கிறோம்.
நாட்டு பசும் பாலில் தங்கம் கலந்து இருக்கிறது. அதனால் தான் நாட்டு பசும்பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டு பசுவின் காம்பில் சூரியவெளிச்சம் படும்போது அது தங்கமாக மாறுகிறது.’ என சர்ச்சைக்கு உரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் தனது இரு நாட்டு பசுமாடுகளை அழைத்து அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் மணப்புரம் தங்க நகை கடன் வழங்கும் ஸ்தாபனத்திற்கு சென்று மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதை நினைவூட்டி தங்க நகை கடன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. நகை கடன் ஸ்தாபன அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!